கொழும்பு போக்குவரத்து சிக்னலில் கோளாறு - ஒரே நேரத்தில் ஒளிரும் இரு விளக்குகள்
கொழும்பு - பன்னிப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாவை நோக்கிச் செல்லும் சாலையில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் அமைப்பில் சிவப்பு மற்றும் பச்சை விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர்வதால் இந்த குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கை
இந்த விடயம் தொடர்பில் மகரகம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பலரும் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் விபத்துகள் ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்