வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களால் அதிகரிக்கும் ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் மலேரியா மீண்டும் பரவுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மத்தியில் இருந்தே இந்த தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம்
இந்த ஆண்டு 27 நபர்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருந்தபோது பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்படாவிட்டால் தொற்றுக்களின் அதிகரிப்பு உள்ளூர் பரவலுக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மலேரியா பரிசோதனை
எனவே தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடு திரும்பும் அனைவரும் வந்தவுடன் மலேரியா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுள்ளனர்.
முன்னதாக, 2016ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் இலங்கை மலேரியா இல்லாததாக சான்றளிக்கப்பட்டது, இலங்கையில் கடைசியாக 2012 இலேயே இறுதியாக மலேரியா தொற்றுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |