இலங்கைக்கு வருகைதரும் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்! வெளியான காரணம்
மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை பெப்ரவரி 18 முதல் 21 வரையில் மேற்கொள்ளவுள்ளார்.
கலந்துரையாடல்
வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவுகளின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனாயாவும் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.
மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri