மாலைதீவு பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரமித்த பண்டார தென்னகோனுக்கும் இடையில் விசேட சந்திப்பு
மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கஸ்ஸான் மஃமூனுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கஸ்ஸான் மஃமூனை மாலைதீவு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் தென்னகோன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்ற அமைச்சர் கஸ்ஸான் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு
மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படைக்கு
வழங்கப்பட்ட தொடர்ச்சியான பயிற்சி உதவிகளுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும்
ஆயுதப்படைகளுக்கு அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்திய அமைச்சர் கஸ்ஸான், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்குமிடையில் மேடற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு முயற்சியின் முக்கியதுவத்தை இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மாலைதீவுக்கு விஜயம் செய்யுமாறு அழைத்தமைக்காக மாலைதீவு பாதுகாப்பு
அமைச்சருக்கு அமைச்சர் தென்னக்கோன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படைக்கு தொடர்ச்சியான இராணுவ கல்வி மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
அத்தோடு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் தேவைகளை அடையாளம் காணவும் மாலைதீவுடனான பயிற்சி நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri