இலங்கையிலிருந்து மலேசியா செல்வோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
இலங்கையிலிருந்து மலேசியா செல்வோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மலேசியாவிற்குப் பயணங்களை மேற்கொள்வோர் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளிலிருந்து மலேசியாவிற்குப் பயணம் செய்வோருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவு அமுல்படுத்தப்படும் அதேவேளை, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு இந்த தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் பிரவேசித்துத் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது 18ம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam