யால வனப்பகுதியில் காணாமல் போன மலேசிய சுற்றுலா பயணி!
யால பூங்காவை பார்வையிடச் சென்ற மலேசிய சுற்றுலா பயணி ஒருவர் நேற்று (24.02.2023) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யால பூங்காவை பார்வையிடுவதற்காக சாரதியுடன் கெப் வண்டியில் புறப்பட்டுச் சென்ற அவர், மெனிக் கங்கைக்கு அருகில் காரை விட்டு இறங்கி, கடற்பகுதிக்கு நடந்து சென்றபோதும் அவர் திரும்பி வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன் பிரகாரம் கிரிந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மற்றும் யால பலடுபான வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குழு இணைந்து காணாமல் போன இந்த சுற்றுலாப்பயணியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மலேசிய சுற்றுலாப் பயணியை தேடும் பணி
இதற்கிடையே யால பிரதேசம் எங்கும் சுற்றுலாப் பயண முகவர்களும் காணாமல் போன மலேசிய சுற்றுலாப் பயணியை தேடும் விடயத்தில் பொலிஸாருடன் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
