கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்
இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட மலேசியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.
மலேசிய நாட்டவரான 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு அதே விமானத்தில் தோஹாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அபுதாபியில் திருகோணமலை பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு தரகர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் விமான அனுமதி மற்றும் விசாவை வழங்கியுள்ளார்.
அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை இளைஞர் அன்றைய தினம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்ற நிலையில்,பின்னர், இலங்கை இளைஞரிடமிருந்து இலங்கை கடவுச்சீட்டை குறித்த மலேசியர் பெற்றுக்கொண்டுள்ளார்.
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் - சாணக்கியனிற்கு இடம்பெறலாம்! பகிரங்க எச்சரிக்கை! (video)

தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட மலேசியர்
இதன் பின்னர் இலங்கை கொழும்பில் உள்ள மலேசிய தூதரகத்தினை தொடர்புகொண்டு தனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாக அறிவித்து, புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 09/19 மாலை தோஹாவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு QRR-யில் விமானம் மூலம் வருகை தந்துள்ளார்.

நாட்டிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிப் பணிகளை மேற்கொண்ட போது அவரது மொழி உச்சரிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இதற்கமைய, மலேசியரை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள், அவர் வந்த அதே கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் மீண்டும் தோஹாவுக்கு நாடு கடத்தப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அமெரிக்காவிடம் பகிர்ந்துகொள்ளப்படும் ஆதாரங்கள்: கனடா - இந்தியா தொடர்பில் அச்சம் வெளியிடும் மேற்குலகம்
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan