கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகை போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9 கோடி 8 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தொகை
மலேசியாவில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு 10,000 மலேசிய ரிங்கிட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளை மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கொள்வனவு செய்து பின்னர் அங்கிருந்து டுபாய்க்கு வந்து, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் காலை 09.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை
இதன்போது அவர் கொண்டு வந்த பைக்குள், சொக்லட் மற்றும் டொபி அடங்கிய 03 பைகளுக்குள் 1 கிலோகிராம் 816 கிராம் எடையுடைய இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் 92 மாத்திரைகளாக தயாரிக்கப்பட்டு, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது.
சந்தேகநபரான விமானப் பயணியும் கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO