மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு
மலையக மக்கள் முன்னணியின் மகளீர் தின நிகழ்வு நுவரெலியா இராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் மலையக மகளீர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று(17.03.2024) நடைப்பெற்றுள்ளது.
மகளீர் தின நிகழ்வு
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு மலையகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டதோடு கௌரவ சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ராதாகிருஷ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரையும் அறிமுகப்படுத்தப்பட்டதோடு பெண் சமாதான நீதவான்களுக்கான நியமன கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேஹம் ரஹ்மான் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.