உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்
கோவிட் - 19 தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக, ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே (Neelika Malavige) நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவிட் - 19 தொழிநுட்ப அணுகல் குழாம் (C-TAP) தொடர்பான அறிவியல், தொழிநுட்ப மற்றும் மூலோபாய விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனம், தொழிநுட்ப ஆலோசனைக் குழு ஒன்றை (TAG) நிறுவியுள்ளது.
கோவிட் - 19 சுகாதார விடயங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என பலதரப்பட்ட அறிவு மற்றும் நிபுணத்துவம் கொண்ட 10 முன்னணி நிபுணர்களை இந்த குழு கொண்டுள்ளது.
அந்த வகையில், மருந்துகள், நோயறிதல், தடுப்பூசிகள் மற்றும் பிற சுகாதார
நிபுணா்கள், பொது சுகாதார நிபுணா்கள், தொழில்நுட்ப பரிமாற்ற நிபுணர்கள்,
மற்றும் மருந்துகளின் ஒழுங்குமுறை நிபுணர்கள் ஆகியோா் இந்தக்குழுவில் அங்கம்
வகிக்கின்றனா்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan