ரணிலுக்கு இடமளிப்போம்: மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) வெற்றி பெறச் செய்யும் நோக்கில் "ரணிலுக்கு இடமளிப்போம்" எனும் தொனிப்பொருளில் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஹுணுப்பிட்டிய கங்காராமை விகாரை அருகில் குறித்த பேரணி நேற்று(27.04.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து நாட்கள் பயணம் செய்த பின்னர் மீளவும் கொழும்பை வந்தடைவதே குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியின் இலக்காகும்.
மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தனவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன, காலநிலை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
