அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் தனி அமைச்சு : வலியுறுத்தும் சஜித்
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ துறைக்காக தனியான அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சரியானதும் செயல்திறன் கொண்டதுமான அனர்த்த முகாமைத்துவ செயல் திட்டம் நடைமுறையில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பணிக்காக தனி அமைச்சரவை
மேலும், அனர்த்த முகாமைத்துவ துறையே இன்றைய நிலவரத்தில் ஒரு “சுனாமி”யால் பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதற்கு தீர்வாக, ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ திட்டம் தயாரிக்கப்பட்டு, அது மத்திய மட்டத்திலிருந்து மாகாண, மாவட்ட மற்றும் கிராம சேவை பிரிவுகள் வரை செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனால், இந்த அத்தியாவசிய பணிக்காக தனி அமைச்சரவை அமைச்சு நிறுவப்பட்டு, அதனை வலுப்படுத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam