முதலில் ஜனாதிபதி தேர்தல்: வெளியானது ஆய்வு முடிவு
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்புவதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், 20 சதவீத மக்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை விரும்புவதாக தெரியவந்துள்ளது.
கடுமையான சட்டங்கள்
சுமார் 81.9 சதவீத மக்கள் பொருளாதாரத்தை உற்பத்தி அடிப்படையிலான ஒன்றாக மாற்றுவதன் மூலமும், ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலமும் பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.
34.6 சதவீதம் பேர் மட்டுமே அமைப்பு மாற்றத்தை நம்புகிறார்கள், அதே நேரத்தில் 16.5 சதவீதம் பேர் கடுமையான சட்டங்களின் மூலமே நாட்டை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



