தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு: மனோ கணேசன்
நாடாளுமன்ற தேர்தல்முறையை விகிதாச்சார முறையிலிருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தனது இறுதி அறிக்கையைக் குழுவில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து பெரும்பாலான தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தனர்.
தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்ப்பித்துள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்பான எமது நிலைப்பாடு
இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம். இந்த போலி அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவுக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
கலப்பு முறையை ஆதரிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈபிடீபி) தமக்குத் தெரிவித்துள்ளதாகக் குழு உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவுக்குழுவில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கலப்பு முறைக்கு இணங்காது என நான் நம்புகிறேன். இந்நிலையில் மிக பெரும்பாலான கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு விரோதமாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இடம்பெறாத அதேவேளை இடம் பெற்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சி பிரதிநிதிகளின் ஆதரவையும் திரட்டி சுருக்கமான மாற்று நிலைப்பாட்டை எழுத்து மூலமாக தெரிவுக்குழுவுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அறிவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாற்று நிலைப்பாட்டு அறிக்கையை நண்பர் சுமந்திரன் எம்பி தயாரிப்பார். அதை அடிப்படையாகக் கொண்டு ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்று, தெரிவுக்குழுவுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் முறைமை தொடர்பான எமது நிலைப்பாடுகளை நாம் தெரிவிப்போம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam