மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்ட ஊடகவியலாளர்!
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் இன்று வரை எழுப்பப்பட்டுவரும் நீதி கோரிக்கைகளுக்கு அநுரகுமார அரசாங்கம் சரியான சட்டங்களை நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விகள் தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரைச் சுடுவதற்காக அவரைச் சூழ்ந்துகொண்ட கொலையாளிகளிடம் நவீன துப்பாக்கிகள் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் அந்த நவீன துப்பாக்கிகளைப் பாவித்து லசந்தவைப் படுகொலைசெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த படுகொலையில் ஆடு மாடுகளைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற captive bolt pistol என்ற ஒருவகைத் துப்பாக்கியால்தான் லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்திருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அரசியலில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய முக்கிய ஊடகவியலாளரான லசந்தவை கொலைசெய்ய, கொலையாளிகள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை ஆராய்கின்றது இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam