ராஜபக்சர்களுக்கு ஏற்பட்ட அவமானம் : மகிந்தவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளரை தெரிவு செய்யும் முழு பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்றுகூடிய கட்சியின் அரசியல் பீடமே இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளது.
குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் இரகசியமாக வைக்கப்பட வேண்டுமென அனைவரும் ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட போதிலும் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளக மோதல்
பொதுஜன பெரமுன கட்சியிருந்த எஞ்சியிருந்த உறுப்பினர்களை சேகரித்து நாமல் ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளக நெருக்கடியை மேலும் அதிகரிக்க வழி வகுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்சி ஒழுக்கத்திற்கு இணங்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபக்ச குடும்பத்தினர் அறிவித்திருந்துள்ளனர். எனினும் நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.