மர்மமான முறையில் கொலை செய்யப்படும் முக்கிய தலைவர்கள் - ராஜபக்ச தரப்பினர் விடும் அச்சுறுத்தலா இது..!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்படுகின்ற முக்கிய தலைவர்கள் பிணையில் விடுக்கப்பட்டு கொலைச் செய்யப்படுவதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் பதிலளித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் வினவப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் மற்றும் இலஞ்சம் வாங்கிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன போன்ற முக்கிய தலைவர்களின் மரணங்களுக்கு பின்னால் ராஜபக்சர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
குறித்த தலைவர்கள் வாயை திறந்தால் பல ரகசியங்கள் வெளியில் வந்து விடும் என்ற பயத்திலேயே இது போன்ற கொலைகள் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மகிந்த ராஜபக்ச செல்லும் முன்னர் இந்த அதிகாரியின் மரணம் ஒரு கொலை அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது என்றார்.
கபில சந்திரசேன மரணம் தொடர்பில் அருட்தந்தை மா. சக்திவேல் வேறு என்னென்ன விடயங்களை பகிர்ந்துள்ளார் என்பதை காணொளியில் காணலாம்.
அதிரடி திருப்பங்களுடன் தமிழகத்தில் உருவான பலமாக அரசியல் கூட்டணி! விஜய்யின் முடிவினால் நிலைகுலைந்துள்ள கட்சிகள்..!