பங்குச் சந்தைக்கு வரும் ஹில்டன் உட்பட முக்கிய அரச நிறுவனங்கள்
பொருளாதார பிரதிபலன்களை கொடுக்காத அரச நிறுவனங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஹில்டன், கிராண்ட் ஒரியண்டல் ஆகிய நட்சத்திர ஹோட்டல்கள், சினோர் நிறுவனம் மற்றும் ஹயாட் திட்டம் என்பவற்றை செலந்தீவா நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களின் 49 வீத பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்து, அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களாக நடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிறுவனங்களில் பங்குகளை வெளிநாட்டு மற்றும் தேசிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் கொள்வனவு செய்ய முடியும்.
இவை அனைத்து நாட்டில் அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார பிரதிபனை வழங்காத அரச கட்டடங்களை தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செலந்தீவா என்ற நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam