லண்டனில் பாரிய வாயு கசிவு! பலர் வைத்தியசாலையில் அனுமதி
லண்டன் - ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் அதிகளவு குளோரின் வாயு வெளியேறியதை தொடர்ந்து சுவாசக் கோளாறு காரணமாக 29 பேர் வைத்திசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் 200 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 பேருக்கு பூங்காவில் உள்ள துணை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு "சுவாசிப்பதில் சிரமம்" இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மையம் 2012 இல் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான முக்கிய இடங்களில் ஒன்றாகும், மேலும் நீச்சல், டைவிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது. இது 2014 இல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.