துபாயில் பதுங்கியிருந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்க்காரர்..! கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்
நாட்டிற்குள் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐவரில் ஒருவராக “ஷிரான் பாசிக்” அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டை விட்டுத் தப்பி வெளிநாட்டில் பதுங்கியுள்ள ஷிரான் பாசிக்கை, இலங்கையையும் அமெரிக்காவும் தூதரக மட்டத்தில் அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என குற்றத் தடுப்புப்பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவ குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய கடத்தல்க்காரர்
தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், துபாயில் மறைந்திருந்த ஷிரான் பாசிக், அந்நாட்டுப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யபபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan