மலேசியாவில் இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் கைது: இலங்கை பொலிஸ் வெளியிட்ட தகவல்
மலேசியாவில், கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதற்கான இராஜதந்திர அல்லது பாதுகாப்பு மட்ட உறுதிப்படுத்தல் இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைக்கவில்லை
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய வூட்லர், வெளிநாட்டிலிருந்துசெயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் என நம்பப்படும் குறித்த இரண்டு சந்தேக நபர்கள் குறித்து, எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

2025 ஜூலை 11 ஆம் திகதியன்று பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களும் 26 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டதாக மலேசியாவிலிருந்து இலங்கை பொலிஸாருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண உதவி கோரி முறையான கோரிக்கை மட்டுமே இலங்கைக்கு விடுக்கப்பட்டதாக வூட்லர் தெரிவித்துள்ளார்.
முறையான கோரிக்கை
இதன்போது. இரண்டு பேரின்; புகைப்படங்களும் கைரேகைகளும் இலங்கையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குற்றப் பதிவுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு சரிப்பார்க்கப்பட்டதாகவும் வூட்லர் குறிப்பிட்டுள்ளார்.
 
   
எனினும் சந்தேக நபர்களில் ஒருவர் 20 வயதுடைய நபர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரும் மற்றையவரும் மலேசிய குடிவரவுச் சட்டங்களின்படி கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        