1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு! நடைமுறைக்கு வரவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
கண்டி தேசிய மருத்துவமனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக, 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டி தேசிய மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை அண்மையில் ஆய்வு செய்தபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவு
அதன்படி, கண்டி தேசிய மருத்துவமனையில் நோயாளிகளுக்காக கட்டப்படவுள்ள New Cancer Complex, Bone Marrow Transplant Unit, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் வார்டு வளாகம் ஆகிய நான்கு முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், அவை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், எனவே, நடந்து வரும் கட்டுமானப் பணிகளை ஓரளவுக்கு முடிக்க தேவையான நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மஹரகம மருத்துவமனைக்குப் பிறகு நாட்டில் கட்டப்படும் இரண்டாவது பெரிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு கண்டி பொது மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய ஒன்பது மாடிகள் கொண்ட புற்றுநோய் வார்டு வளாகத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த ஆண்டு ஒரு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் 2 வார்டுகள் திறந்து வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள்
மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவமனைகளின் இருப்பிடம் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவமனைகளின் வளர்ச்சியில் வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் மருத்துவமனைகளில் நெரிசல் தற்போது தாங்க முடியாத அளவில் இருப்பதாகவும், ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவன் மூலம் இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
அத்துடன் தேசிய மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகளின் வசதிகளை அதிகரிக்கவும் ஒரு முறையான திட்டத்தைத் தயாரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
