தொடருந்து பாதையில் திடீரென விழுந்த மரம்: நேரவிருந்த மிகப்பெரும் அசம்பாவிதம்
மஹரகம பிரதேசத்தில் திடீரென பலா மரமொன்று தொடருந்து பாதையில் விழுந்துள்ள நிலையில் இதனால் நேரவிருந்த மிகப்பெரும் அசம்பாவிதம் தொடருந்து கடவையில் பணிபுரியும் ஊழியரால் தடுக்கப்பட்டுள்ளது.
மஹரகம புகையிரத நிலையத்தில் இருந்து கொட்டாவ நோக்கி சுமார் 600 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள காணியில் இருந்த 40 வருடங்கள் பழமையான பலா மரமொன்று திடீரென தொடருந்து பாதையில் விழுந்துள்ளது.
கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
காலை 8 மணியளவில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி தொடருந்து சென்று கொண்டிருந்த போது, மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்த இந்த பலா மரம் தொடருந்து பாதையில் விழுந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட ஊழியர்
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. தண்டவாளத்தில் பலா மரம் விழுந்த 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், கொழும்பு நோக்கி செல்லும் குறித்த தொடருந்து அந்த பாதையூடாக செல்லவிருந்ததாக தெரியவருகிறது.
இதனை அறிந்த கடவை ஊழியர் உடனடியாக செயற்பட்டு கொட்டாவை நோக்கி சுமார் 200 மீற்றர் தூரம் ஓடி தொடருந்தை நிறுத்துமாறு சைகை காட்டியதையடுத்து தொடருந்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், நேரவிருந்த பெரும் விபத்தொன்றும் தடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 30 நிமிடங்களில் குறித்த பலாமரம் வெட்டி எடுக்கப்பட்டு அப்பாதையூடாக தொடருந்து போக்குவரத்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடியோவை பார்க்க (CLICK HERE..)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |