குடியுரிமையை பாதுகாத்துக்கொள்ள பெண் சோதிடரை சந்தித்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடியுரிமையை பாதுகாத்துக்கொள்வதற்காக அனுராதபுரத்தில் உள்ள பெண் சோதிடரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்துச் செய்ய வேண்டும் என ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகி இருந்தன.
சாதாரணமாக இப்படியான சந்தர்ப்பங்களின் போது சிரேஷ்ட சட்டத்தரணிகளை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது வழக்கம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனுராதபுரத்தில் உள்ள ஞானக்கா என்ற சோதிடம் கூறும் பெண்ணை சந்திப்பதற்காக அவரது கோயிலுக்கு சென்றுள்ளார்.
அந்த கோயிலுக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மதியம் 12.30 வரை அங்கு இருந்துள்ளார். கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே திலங்க தேல பணடார், ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோரும் அங்கு இருந்துள்ளனர்.
மூவரும் இணைந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 9 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
