மைத்திரியின் மகள் வீட்டில் தங்கக் குதிரைகள் : அதிருப்தி வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி
எனது மூத்த மகள் வீட்டில் தங்கக் குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(24) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தங்கக் குதிரைகள் அந்த வீட்டில் எதுவும் இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். அந்த வீட்டிலிருந்து பால் பக்கற்றுகள் மற்றும் சில உணவுப் பொருட்களையும் பானங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், தங்கக் குதிரைகள் அந்த வீட்டில் எதுவும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் செய்தித்தாள் வாசிப்பாளர் ஒருவர் தனது மகளின் வீட்டில் திருடப்பட்டுள்ளமை குறித்து மிக அநாகரீகமாக செய்தியினை விவரித்திருந்தார்.
ஜனாதிபதி ஒருவருக்கு பரிசில்கள் வழங்கினால், அதனை மகளின் வீட்டில் வைப்பது சரியா எனக் கேட்டிருந்தார்.
கத்தார் விஜயத்தின் போது என்னைப் பாதுகாக்கச் சென்றவர்களுக்கு அந்நாட்டுத் தலைவர் சுமார் பத்து இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வழங்கினார். எனக்கு அதிகாரப்பூர்வமாக தருவதை தந்தார்கள்.
மேலும் நூறு கோடி செலவு செய்து பொலன்னறுவையில் அருங்காட்சியகத்தை உருவாக்கினேன். இந்த நாட்டில் எந்த ஜனாதிபதியும் அருங்காட்சியகம் கட்டவில்லை. நான் ஜனாதிபதியாக இருந்தபோது கிடைத்த பரிசுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் உள்ளன.
எனக்கு கிடைத்த பொருட்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு அறை உள்ளது. அந்த பரிசுகளை முந்தைய ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
