ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயாராகும் மைத்திரிபால!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது சாதகமான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறிசேன அப்படிச் சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
தேநீர் கடை
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ''வேட்புமனுக்களை கையளிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு ஒழுக்கத்தை பேணத் தவறியுள்ளது.
முன்னதாக, தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தைப் போல் ஒழுக்கத்தைக் கடைபிடித்ததுடன் மரியாதையையும் பேணி வந்தது.
ஆனால், இம்முறை அது பல கும்பல்கள் கூடியிருக்கும் கிராமத்து தேநீர் கடையைப் போல் இருந்தது.
முதல் குடிமகன்
நாட்டின் முதல் குடிமகனாக வேண்டும் என்று முன்வந்தவர்களின் நடத்தை வருத்தத்தை அளிக்கிறது. ஒரு வேட்பாளரை ஊக்குவிப்பதற்காக அங்கு சில போலி வேட்பாளர்கள் இருந்தனர்.
அவ்வாறான 15 முதல் 20 போலி வேட்பாளர்கள் இருந்தனர். வேட்பாளர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினேன்.
மேலும், ஒழுக்கத்தைப் பேணுமாறு மக்களைக் கேட்பதற்கு முன், நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
