பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி பேசும் மைத்திரி
பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் தேவை இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
பெப்ரல் அமைப்பு ஒழுங்கு செய்த“மாற்றத்திற்கான வழி” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 3 சத வீதமாக உள்ளது. பல தேர்தல்கள் அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான தொனிப்பொருளாக மாறியது. உலகில் முதல் பெண் பிரதமர் இலங்கையை சேர்ந்த பெண்.
இதனால், நாட்டின் அரசியல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புதிய கருத்துக்களை பெற்றுக்கொள்ள பெண்கள் அரசியலுக்குள் வரும் தேவை தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை.
இவ்வாறான பின்னணியில் பெண்களின் பிரதிநிதித்துவம் பொதுத் தேர்தலில் போன்று மாகாண சபைத் தேர்தலிலும் அவசியம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.