கூடவே இருந்து சூழ்ச்சி செய்வதை விடவும் வெளியேறிச் செல்லுங்கள்: மைத்திரி தரப்புக்கு எச்சரிக்கை
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்வதைவிட, வெளியேறி அரசியல் செய்யுங்கள்." என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திரக் கட்சியை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவரும் ரொஷான் ரணசிங்க, பல தடவைகள் வெளியே செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சு.கவின் சிரேஷ்ட உப தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam