மகிந்த கூட்டணியால் விஜேராமவுக்கு அழைத்துவரப்பட்ட மக்கள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது நான் மக்களை அழைத்துவருவதில்லை என அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மகிந்த செப்டெம்பர் 11 ஆம் திகதி கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை கண்டோம் என ஊடகவியலாளர் ஒருவர் கூறியிருந்தார்.
மக்களை அழைத்துவருவதில்லை
உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய மைத்திரி, இல்லை. நான் மக்களை அழைத்துவருவதில்லை என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், அதாவது, மக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறார்களா? என்றார்.
இதற்கு பதில் வழங்கிய மைத்திரிபால சிறிசேன நான் மக்களை அழைத்துவருவதில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை நான் மதிக்கிறேன்” என கூறியுள்ளார்.





இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
