மைத்திரியும் ஞானசார தேரருமே ஈஸ்டர் தாக்குதலை நடத்தினர்: மகிந்த அமரவீர
ஈஸ்டர் ஞாயிறு தினம் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அதன் இறுதி அறிக்கையில் காணமுடியவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஞானசார தேரர் உள்ளிட்டோருமே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை ஆணைக்குழு கண்டறியவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையில் பல குறைப்பாடுகள் உள்ளன. அது முற்றிலும் முழுமையற்ற அறிக்கை.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல, ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்து எதிர்த்துள்ளன எனவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.



