ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விவகாரம்: மைத்திரி அளித்துள்ள விளக்கம்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirirsena) இடைநிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தனது தரப்பு உண்மைகளை எதிர்காலத்தில் நீதிமன்றில் முன்வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Bandaranayakke) என்னை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றில் பெற்றுள்ளார்.
அரசியல் செயற்பாடுகள்
இந்த கட்சியின் வரலாற்றில் இவ்வாறான சவால்கள் எனக்கும் கட்சிக்கும் புதிதல்ல.

இதுபோன்ற எத்தகைய சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

எதிர்காலத்தில் எமது தரப்பு உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைப்பதோடு மக்களுக்கும் தெறியப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam