மைத்திரி வெகுவிரைவில் சிறை செல்வார்: கம்மன்பில சுட்டிக்காட்டு

2019 Sri Lanka Easter bombings Maithripala Sirisena Uthaya Gammanpila
By Rakesh Mar 24, 2024 11:34 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசைத் தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு

நல்லாட்சி அரசு

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதாரப் பாதிப்புக்கு வித்திட்டது. நல்லாட்சி அரசின் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மைத்திரி வெகுவிரைவில் சிறை செல்வார்: கம்மன்பில சுட்டிக்காட்டு | Maithiri Will Go To Jail Soon Kammanpila

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் யார் என்பதைத் தான் அறிவேன், நீதிமன்றம் அழைப்பு விடுத்தால் உண்மையைப் பகிரங்கப்படுத்தத் தயார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடாது, பொலிஸூக்குச் செல்ல வேண்டும் என்று மைத்திரிபாலவிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

மக்கள் ஆணை

பயங்கரவாதம் தொடர்பிலும், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது10 ஆண்டு கால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடைச் சிறைக்குச் செல்வார். 69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை ஸ்தாபித்தார்கள்.

மைத்திரி வெகுவிரைவில் சிறை செல்வார்: கம்மன்பில சுட்டிக்காட்டு | Maithiri Will Go To Jail Soon Kammanpila

இலங்கை அரசியல் வரலாற்றில் கோட்டாபய ராஜபக்சவைப் போன்று எவரும் மக்கள் ஆணையைக் காட்டிக் கொடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான மக்கள் ஆணையை ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டுத் தப்பியோடினார் கோட்டாபய ராஜபக்ச. கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடு வெறுக்கத்தக்கது.

சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் 69 இலட்சம் மக்கள் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. 69 இலட்சம் மக்கள் ஆணையை நாங்களே தோற்றுவித்தோம். ஆகவே, நாங்களே 69 இலட்சம் மக்கள் ஆணைக்குத் தலைமைத்துவம் வழங்குவோம்" என தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கனடாவில் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US