ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாக மைத்திரிக்கு உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் தனக்கு தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு (Maithripala Sirisena) ஜனாதிபதி விசாரணைக்குழுவில் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளையதினம் ஜனாதிபதி விசாரணைக் குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்துமூல அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணைக்குழு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே (India) செயற்பட்டதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாளிகாகந்த நீதிமன்றத்தினால் எதிர்வரும் 4ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையிலேயே, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஆதாரங்களை கையளிக்குமாறு விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
