புதிய ஜனாதிபதி யாரென்றாலும் ஆதரிக்க தயார்: மைத்திரிபால உறுதி
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (21) காலை வாக்களிப்பினை மேற்கொண்ட பின்னரே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நான் தற்போதைக்கு அரசியலை விட்டு ஒதுங்கவில்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்.
பொருளாதார நெருக்கடி
அதேநேரம், இன்றைய தேர்தலின் மூலம் தெரிவாகும் ஜனாதிபதிக்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன். ஆனாலும் புதிய ஜனாதிபதியாக தெரிவாகின்றவர் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்கான தேர்தல்களை நடத்த வேண்டும்.
அதற்கான நிதியைத் தேடிக்கொள்ள வேண்டும். அவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதி பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |