மகிந்தவை விடவும் கூடுதல் தொகை செலவிட்டுள்ள மைத்திரி..! வெளியான தகவல்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பெருந்தொகை பணத்தை தங்களது பிரத்தியேக பணியாளர்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ச மொத்தமாக 2578 பிரத்தியேக பணியாளர்களுக்கு சம்பளமாக 630 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1317 பிரத்தியேக பணியாளர்களுக்கு 850 மில்லியன் ரூபாவை சம்பளமாக வழங்கியுள்ளார்.
அரச சொத்துக்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த தனது ஒதுக்கத்தில் 43 வீதம் பிரத்தியேக பணியாளர்களுக்காக செலவிட்டுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை செலவிட்டுள்ளார்.
அரச பணத்தை துஸ்பிரயோகம் செய்யப் போவதில்லை என உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய மைத்திரிபால சிறிசேன கூடுதல் தொகையை செலவிட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான விரயங்களினால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து இன்று பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.