சுதந்திர கட்சியின் மாநாட்டில் சந்திரிகா பங்கேற்பார் என நம்புகின்றாராம் மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை
கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஏற்றுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.
பொருளாதாரப் பிரச்சினையைக் கருத்தில்கொண்டே மாநாட்டை குருநாகலில் நடத்தாமல் கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |