நாட்டு மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை!
நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிகபட்ச சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை கூறியுள்ளார்.
கோவிட் தொற்றுநோயை அரசாங்கமும் சுகாதாரத் துறையும் தனியாக எதிர்கொள்ள முடியாது. ஊரடங்கு நீக்கப்படும்போது பொதுமக்கள் மீண்டும் கூட்டமாக கூடுவார்கள்.
இந்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கோரியுள்ளார்.
ஊரடங்கின் போது நிலைமையை நிர்வகிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பல முக்கிய முடிவுகளை எட்டியுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.