பொதுமக்கள் கவனத்திற்கு..! கொழும்பை சுற்றியுள்ள 5 பகுதிகளுக்கான நீர் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயின் திருத்தப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
நீர் விநியோகம்
இதனைத் தொடர்ந்து, இன்று(05.06.2026) மாலை 6 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலையில் ஏற்பட்ட பிரதான நீர் விநியோகக் குழாய் திடீர் உடைப்பு காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னர் அறிவித்துள்ளது.
தற்போது சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளமையினால் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.