ரஷ்ய விஜயத்தில் மோடி சாதித்துக் கொண்ட முக்கிய விடயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மொஸ்கோ பயணத்தின் போது, ரஷ்யா தனது இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு எதிரான மோதலில் ரஷ்யாவின் சார்பில் போராடும் போது குறைந்தது இரண்டு இந்திய குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
ரஷ்யாவின் ஒப்பந்தம்
இதேவேளை, போர் மண்டலத்தில் சிக்கியவர்களில் பலர், தாங்கள் போரில் சேர ஏமாற்றப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று(08) இரவு விளாடிமிர் புடின் வழங்கிய தனிப்பட்ட விருந்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரச்சினையை கொண்டு வந்ததாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கு பதிலளித்துள்ள புடின், தங்கள் இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றவும், அவர்கள் நாடு திரும்புவதற்கு உதவவும் ரஷ்யா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
