யாழில் 10 நாட்களின் பின் கைதான பிரதான சந்தேக நபர்
அண்மையில் யாழ்.வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (09) ஊர்காவற்றுறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காரில் சென்ற ஒருவரை
கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங் காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது.

காயமுற்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடர்புடைய குழுவை தேடி பொலிஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியான கொன்சாபத்து ஹரிதாஸ் தலைமையிலான அணியினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும்.விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவித்த ஊர்காவற்றுறை பொலிஸார் கைதான பிரதான நபரை விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.
நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனங்கள் - ரணில் எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri