கொழும்பில் வெடித்த மற்றுமொரு போராட்டம்: மைதானமாக மாற்றப்பட்ட கொழும்பின் பிரதான வீதி(Video)
கொழும்பு - தெகிவளை பிரதான வீதியை மறித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் போராட்ட களத்தை மைதானமாக மாற்றி வீதியை மறித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும், இன்று எரிபொருள் இல்லை என கூறியமையால் கோபமடைந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு-தெகிவளை பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டு காணப்பட்டுள்ளது. இருப்பினும் நோயாளர் காவு வண்டிகளுக்கு மாத்திரம் செல்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் தமக்கான எரிபொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்லப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.