பிரதான நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 80 வீதமாக உயர்வு
நாட்டின் பிரதான நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் 80 வீதமாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை பணிப்பாளர் எஸ்.பீ.சீ சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தெதுரு ஓயா, ரஜங்கனய, அங்கமுவ நீர்நிலைகள் நீர் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமை
குருணாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நீர் நிலைகளின் நீர்மட்டம் நிரம்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் மேலும் நீர் மட்டம் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும். கண்டி, நுவரெலியா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும் வெள்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |