ஈழத்தமிழரை புறம்தள்ளி அமெரிக்கா இந்தியா எடுத்துள்ள முக்கிய முடிவு(Video)
ரஷ்ய - உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் இந்தோ - பசுபிக் விவகாரம் என்பது சூடுபிடிக்கும் ஒரு விடயமாக மாற்றியுள்ளது என இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தோ பசுபிக் விவகாரம் சூடு பிடிக்குமாக இருந்தால் இலங்கை ஒரு முக்கிய தலமாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தோ - பசுபிக் விவகாரத்தில் இலங்கை தரப்பானது சீனாவிற்கு ஆதரவாகவே செயற்படும்.
இந்நிலையில் இலங்கையை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான யுக்திகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவினால் இப்போதிருந்தே வகுக்கப்படுகிறது.
இதில் முக்கியமாக ஈழத்தமிழரை புறம்தள்ளி அமெரிக்கா மற்றும் இந்தியா தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது." என தெரிவித்துள்ளார்.



