மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் நூறாவது நாள் போராட்டத்திற்கு அழைப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நூறாவது நாளை எட்டவுள்ள நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி பாரிய கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தங்களது கால்நடைகளுக்கான தங்களது இடம் அத்துமீறிய குடியேற்றவாசிகளால் அபகரிக்கபட்டதை தொடர்ந்து பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை நூறாவது நாளை எட்டவுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
இந்நிலையிலும் தொடர்ச்சியாக அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் கால்நடைகள் கொல்லப்பட்டு வருகின்றன.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பல தடவைகள்
தமது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ள நிலையிலும் இதுவரையில் ஒரு
கடிதத்திற்கு கூட பதில் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,மதத்தலைவர்கள் என அனைவரையும் ஒத்துழைப்பு வழங்கி தங்களுடைய போராட்டத்தை வலுப்பெறச் செய்யுமாறு மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக செய்திகள் - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
