மகியங்கனையில் பாரிய விபத்து! பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் படுகாயம்
மகியங்கனைப் பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற பாரிய விபத்தொன்றில் காயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகியங்கனை நகரின் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி சந்தி அருகே இன்று காலை குறித்த பேருந்தொன்று இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பாடசாலை மாணவர்கள்
பிரேக் பொறிமுறை சரியாக செயற்படாத காரணத்தினால் பாதையோரமாக இருந்த மண் திட்டு ஒன்றில் மோதியே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் மகியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் பாடசாலை மாணவர்கள் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
