ரணிலுக்கு மகிந்த வழங்கிய பரிசு...! எப்படி இருந்தவர்கள் இப்படியாகின்றார்கள்....!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் போத்தல்களை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் தங்காலையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்திற்கு சென்று அவரது நலம் விசாரித்தபோது, ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த தயிர் மற்றும் தேன் வழங்கப்பட்டுள்ளது.
சிறிது நேரம் பேசிய பிறகு, மகிந்த ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவை மதிய உணவு சாப்பிட அழைத்துள்ளார். மேலும் மதிய உணவு கிராமத்து பாணியில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால அரசியல்
மதிய உணவின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் எனவும் இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவது அவசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த இந்த விடயம் குறித்து நாமலுக்கும் சாகர காரியவசத்துக்கும் தெரிவித்து தேவையான உதவிகளை வழங்குவதாக கூறியுள்ளார். மதிய உணவுக்கு பிறகு, தேன் மற்றும் தயிர் சாப்பிட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள்
அதன் பிறகு, மகிந்த ரணிலுக்கு பல தயிர் சட்டிகளையும் தேனும் வழங்கியுள்ளார். இது கிராமத்தின் நல்ல தேன் மற்றும் தயிர் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தயிர் மற்றும் தேனை மிகவும் கவனமாக கொழும்புக்கு கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
