மகிந்தவிடம் இருக்கும் 93 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து தொடர்பில் வெளியான தகவல்! உடனடியாக சிஐடியை நாடிய நபர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எட்டு வங்கி கணக்குகளில் சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி கட்சியின் செயற்பாட்டாளரான பசன் கஸ்தூரி என்பவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து போலி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முறைபாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொகை பணம் இருப்பதாக பிரசாரம்
திட்டமிட்ட அடிப்படையில் இந்த பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பிரசாரம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கோருவதாகவும் இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவது தெளிவாக தெரிகின்றது எனவும் சமூக ஊடக கணக்குகளை அவதானித்தாலும் அவற்றில் இடப்படும் பதிவுகளை அவதானித்தாலும் இது வெளிப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி உகண்டாவில் மகிந்தவின் பணம் இருப்பதாக கூறிய போலி பிரசாரத்திற்கு நிகரான ஓர் போலி பிரசாரமே இது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சீசல்ஸ், ஐரோப்பா மற்றும் துபாய் போன்ற இடங்களில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் பெருந்தொகை பணம் இருப்பதாக தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஒன்றரை வருடங்கள் கடந்தும் இதுவரையில் அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டு வருவதாகவும் மகிந்தவின் புதல்வரது ராக்கெட் கதை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போலி பிரசாரங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பசன் கஸ்தூரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri