வேலுகுமார் எம்.பியை கடுமையாக எச்சரித்த மஹிந்தானந்த: சபையில் கடும் வாக்குவாதம் (VIDEO)
பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டு வரப்படாமல், விவசாய அமைச்சுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், விவசாய அமைச்சினால் நான்கு தோட்டங்களின் காணிகள் சுவீகாிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கும்,விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கும் இடையில் இவ்வாறு கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டிய-கலபொட 285 ஹெக்டேயர் காணியும், வட்டவளை - மவுஜின் தோட்டத்தில் 43 ஹெக்டேயர் காணியும், ஹந்தானை தெல்தொட்டயில் 40 ஹெக்டேயர் காணியும், தெல்தோட்ட கிரேட்வெலியில் 101 ஹெக்டேயர் காணியும் விவசாயத்துறை அமைச்சினால் சுவீகரிக்கப்பட்டதாக வேலுக்குமார் கூறிய போதே இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்த காணிகள், மொஹமட் இம்தியாஸ் மொஹமட் சாபிக் மற்றும் பெஸ்டியன் நிக்கலஸ் டொன் பிரான்ஸிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri