இலங்கையில் வெடித்த போராட்டம்! இந்தியர் ஒருவரின் வகிபாகம் குறித்து வெளிவந்த இரகசியங்கள்
2022 ஆம் ஆண்டு நடந்த கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தின் போது முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வீட்டை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்க இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே சென்ற இரகசியம் தொடர்பில் போராசிரியர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பொருளாதாரத் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியருமான சுனந்த மத்தும பண்டார எழுதிய, "போராட்டத்தின் சக்தி - கோட்டாபயவை வெளியேற்றியதிலிருந்து ரணிலின் சிறைவாசம் வரை" என்ற நுலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார ரணில் விக்ரமசிங்கவின் அலோசகராகவும் இருந்துள்ளார்.
சுனந்த மத்தும பண்டார யார்?
2022 ஆம் ஆண்டு ஜுலை 13 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் வீட்டை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்த போது திடீரென அங்கு வந்த முக்கிய நபர் அமெரிக்க தூதுவர் ஜுலிசங் அல்ல உண்மையாக வந்தவர் கோபால் பால்கே.

அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை ஜனாதிபதி பதவியை பாரமெடுக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.அரகலய தொடர்பில் விமல் வீரவன்ச எழுதிய நூலில் அச்சந்தர்ப்பத்தில் ஜுலிசங் வந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தவறானது என சுனந்த எழுதியுள்ளார்.
கோபால் பால்கேயின் வகிபாகம்
அரகலய தொடர்பில் நான்கு புத்தங்கள் வெளிவந்துள்ளன.அவற்றில் ஒன்று கோட்டாபய ராஜபக்ஷவும் எழுதியுள்ளார்.அவற்றில் கோபால் பால்கே தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மேலும் 'அரகலய' தொடர்பில் ஜுலிசங் மட்டுமே பெருவாரியாக பேசப்பட்டவர்.கோபால் பால்கே தொடர்பில் எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

நூலாசிரியர் சுனந்த மத்தும பண்டார - மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுடன் நடத்திய கலந்துரையாடலின் ஆதாரங்களை கொண்டே இந்த விடயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வீட்டை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தாண்டி கோபால் பால்கே எப்படி வந்தார்.
அவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம் என்ற பெரும் சந்தேகம் இருப்பதாகவும்,சாபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலின் சாராம்சத்தில் இந்தியாவின் நேரடி தொடர்பு போராட்டத்தில் இருந்ததாலே கோபால் பால்கே இவ்வாறு செயற்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.