மீண்டும் மத வழிபாடுகளில் நாட்டம் காட்டும் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மத வழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில காலங்களாக மிகவும் மௌனமான போக்கினை பின்பற்றி வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மைய தினங்களாக பௌத்த விகாரைகள், கோயில்கள் என பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
தேர்தல் தோல்வியின் பின்னர் இதேவிதமாக மகிந்த மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விகாரையில் வழிபாடு
நேற்றைய தினமும் அழுத்மாவத்தை விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எந்த நாளும் தலைமை பதவியில் நீடிக்க முடியாது, இளைய தலைமுறையினருக்கு அவற்றை கொடுக்க வேண்டும்.
நிச்சயமாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாத அரசாங்கத்தினால் பயனில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து விடயங்களையும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |